Sri Varahi Foundations  
Sri Varahi foundations is planning to facilitate to the Hindu Religion followers towards culture and Divine Services and to educate our people about Hindu customs, traditions and heritage for better appreciation of their cultural roots and identity.
 
 
   
UPCOMING EVENTS...  

ஸ்ரீ வாராஹி கோடி நாம அர்ச்சனை

ஸ்ரீ வாராஹி கோடி நாம அர்ச்சனை கடந்த மன்மத வருடம் புரட்டாசி மாதம் 3ம் தேதி (20.09.2015) துவங்கி அன்னையின் பரிபூரண அருளுடன் பல்வேறு பகுதிகளிலும் பல ஆன்மீக அன்பர்களின் இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு துர்முகி வருடம் ஆனி மாதம் 25ம் தேதி ஆஷாட நவராத்திரியில் (09.07.2016) சனிக்கிழமை பஞ்சமி திதி அன்று 108 நிவேதனங்களுடன் பூர்த்தி செய்யப்பட்டது.

மீண்டும் அன்னை ஸ்ரீ வாராஹி தேவியின் ஆணைக்கிணங்க அன்னை ஸ்ரீ வாராஹி தேவிக்கு எங்கள் குல தெய்வம் சிறுவாச்சூர்     ஸ்ரீ மதுரகாளியம்மன் அருளோடும், நடமாடும் தெய்வம் காஞ்சி மஹான்            ஸ்ரீ மஹாபெரியவா அருளோடும், கோடி நாம அர்ச்சனை நடத்த உத்தேசித்துள்ளோம்.

இந்த கோடிநாம அர்ச்சனை வருகின்ற விகாரி வருடம் சித்திரை மாதம் 6ம் நாள், வெள்ளிக்கிழமை,  சித்ராபெளர்ணமி ( 19.04.2019 ) அன்று  மாலை 5 மணி அளவில் சென்னை , வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மேகாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத ஸ்வாமி திருக்கோயிலில் குத்துவிளக்கு பூஜையுடன் தொடங்க இருக்கிறது.  மேலும் ஸ்ரீ வாராஹி கோடி நாம அர்ச்சனையை ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் செய்யாமல் பரவலாக அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொருவர் இல்லத்திலும் அன்னையின் திருநாமம் ஒளிக்கும் வண்ணம் அனைத்து பகுதிகளிலும் நடத்த உத்தேசித்துள்ளோம். இந்த சக்திமிகுந்த உயரிய பூஜையை அன்னை ஸ்ரீ வாராஹியின் அருளுடன் தங்கள் இருப்பிடத்தில் நடத்த விரும்பும் ஆன்மீக அன்பர்கள், தங்களுக்கு ஏற்ற நாளை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும். உபயம் மற்றும் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

அனைத்து ஆண், பெண் பக்தர்களும் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளும் தங்களை கிடைத்தற்கரிய ஸ்ரீ வாராஹி கோடி நாம அர்ச்சனையில் இணைத்துக்கொள்ளலாம். தங்கள் பகுதிகளில், இல்லங்களில் நடத்த விரும்புபவர்கள் தொடர்புகொள்ளலாம்.

லோகா ஸமஸ்த்தா ஸுகினோ பவந்த்து

மேலும் விபரங்களுக்கு
தி.ஸ்ரீனிவாசராமன்,
ஸ்ரீ வாராஹி உபாசகர், ஜோதிடர் - ஸ்ரீ வாராஹி பெளண்டேஷன்ஸ்

T.SRINIVASARAMAN, SRI VARAHI UPASAHAR, JYOTHISH

 

Reserved.Sri Varahi Foundations.